Connect with us
A former cricketer called Jadeja a caste name A former cricketer called Jadeja a caste name

Cricket news

ஜடேஜாவை ஜாதி பெயர் சொல்லிப் பாராட்டிய முன்னாள் கிரிக்கெட் வீரர் !

Published

on

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் தொடர் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ரவீந்திர ஜடேஜா ஒரு ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டி விளையாடுவதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

முதல் நாள் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது திக்கி தடுமாறி 177 ரண்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதற்கு மிக முக்கிய காரணமானவர் ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கெட்கள் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை நிலைகுலைய வைத்தார்.

அப்பொழுது ரவீந்திர ஜடேஜாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி ஜாதி பெயர் சொல்லி பாராட்டி உள்ளார் இது மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ளது.

Former cricketer Ravi Shastri called Jadeja a caste name
Former cricketer Ravi Shastri called Jadeja a caste name

ரவீந்திர ஜடேஜா பல மாதங்கள் காயம் காரணமாக எந்த ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. இந்தியாவிற்கு மிக முக்கியமான இந்தப் போட்டியில் அசத்தலாக விளையாடி வருகிறார். முதல் நாள் முடிவின்போது ரவி சாஸ்திரி ரவீந்திர ஜடேஜாவை வாழ்த்தியதோடு அவரின் ஜாதிப் பெயரான ராஜ்புட் என்ற பெயரை பயன்படுத்தி பாராட்டி உள்ளார். இது மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்து பலர் ரவி சாஸ்திரியை எதிர்க்கும் வகையில் சமூக வலைதளங்களில் ஜாதி பெயர் சொல்லி ஜடேஜாவை வாழ்த்திய வீடியோவை அதிகம் பகிர்ந்து அவர்களின் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

2 Comments

2 Comments

  1. Pingback: கொக்கு போல் காத்திருந்த ஆஸ்திரேலியா ! வாய்ப்பைத் தவறவிட்ட ஸ்டீவ் ஸ்மித் ! - News crowns

  2. Pingback: முறைகேடாக பந்து வீசிய ஜடேஜா ! ஐசிசி அளித்த தண்டனை அதிர்ச்சியில் ரசிகர்கள் ! - News crowns

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending