Connect with us
Two of the most expensive players in the opening season of IPL and WIPL Two of the most expensive players in the opening season of IPL and WIPL

Cricket news

IPL மற்றும் WIPL தொடக்க சீசனில் மிகவும் விலையுயர்ந்த இரண்டு வீரர்கள் !

Published

on

இந்தியாவில் ஆண்டுதோறும் IPL தொடர் மிகப் பிரமாண்ட முறையில் நடைபெற்று வருகிறது குறிப்பாக IPL தொடரில் இளம் வீரர்கள் பலர் தங்களது திறமையை வெளிக்காட்டி இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்த வரலாறும் உண்டு.

IPL தொடர் முதல் முறையாக 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அந்த ஆண்டில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் “மகேந்திர சிங் டோனி” ஆவார். இவரை “சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)” அணி 9.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

குறிப்பாக முதல் IPL தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி ராஜஸ்தான் ராயலிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது மகளிர்க்கான IPL தொடர் 2023 ஆம் ஆண்டு முதல் துவங்கப்படும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக அணிகள் அறிவிக்கப்பட்டது. பின்னர் வீராங்கனைகளை அந்தந்த அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

top most expensive player Dhoni and smriti mandhana
top most expensive player Dhoni and smriti mandhana

குறிப்பாக முதல் மகளிருக்கான IPL தொடரில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீராங்கனை இந்திய அணியின் பேட்ஸ்மேன் “ஸ்மிருதி மந்தனா” . இவரை “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB)” அணி 3.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. அணியின் மொத்த தொகையில் 27 சதவீதத்திற்கு ஏலம் போய் ஸ்மிருதி மந்தனா சாதனை படைத்துள்ளார்.

1 Comment

1 Comment

  1. Pingback: ரவீந்திர ஜடேஜாவின் டெஸ்ட் சாதனைகள் ! - News crowns

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending