Connect with us

News

வைரம் தேடி அலையும் ஆந்திர மக்கள்

Published

on

ஆந்திர மாநிலத்தில் ஜொன்னகிரி கிராமத்தில் விவசாயி ஒருவர் 30 கேரட் எடை கொண்ட வைரம் கண்டுபிடித்த தாகக் கூறப்படுகிறது.
அந்த வைரத்தை 1.2 கோடி ரூபாய்க்கு விற்று விட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

அரசரின்பண்டைய கால நகைகள்:

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் ஜொன்னகிரி என்ற கிராமம் உள்ளது. இந்த ஊர் சுவர்ணகிரி என்ற பெயரில் மௌரியப் பேரரசின் தெற்கு பகுதி தலைநகராக இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் மௌரியப் பேரரசின் பண்டைய கால நகைகள் இங்கு சேகரித்து வைக்கப்பட்டு இருந்ததாக ஆந்திராவில் கதைகள் உண்டு.

எனவே விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் அவரின் அமைச்சர் திம்மரசரும் இந்த ஊரில் வைர தங்க புதையல்கள் புதைத்து வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

கோல்கொண்டா சுல்தான்களும் இந்த ஊரில் பொக்கிஷங்களை மறைத்து வைத்ததாக கதைகள் உலவுகின்றன.

30 கேரட் எடை கொண்ட வைரக்கல்:

இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை பருவமழை தொடங்குவதற்கு முன் அல்லது பருவ மழைக்காலம் முடிந்தபின் ஜொன்னகிரி கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தொக்கலி, மணிகீரா, பகிதிராய், பேராவழி, மகாநந்தி மற்றும் மஹாதேவபுரம் கிராமங்களில் உள்ள வயல் வெளிகளில் வைரக்கற்கள் வெளிவரும் என்று மக்கள் நம்புகின்றனர்.

ஜூன் மாதத்தில் வொளிவரும் வைரம்:

தற்போது ஜூன் மாதம் நெருங்கி விட்டால் ஜொன்னகிரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிக்கு அவரின் விளை நிலத்தில் 30 கேரட் எடை கொண்ட வைரக்கற்கள் கிடைத்தது.

அதனை சுமார் ஒரு கோடியே 2 லட்சம் ரூபாய்க்கு அவர் விற்று விட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது இதையடுத்து ஏராளமானோர் இந்த கிராமங்களில் தங்கி இருந்து வைரக்கற்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குடிசை போட்டு தங்கி வைர வேட்டை:

ஆண்கள் பெண்கள் என அனைவருமே உறக்கத்தை மறந்து வைரக்கற்களை தேடுகின்றன இதற்காக இந்த கிராமங்களில் குடிசை போட்டு தங்கி உள்ளனர்.

எனவே அதாவது வைரம் தேடிய இரு விவசாயிகளுக்கு இன்று காலையில் மேலும் இரண்டு வைரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது ஆனால் அந்தக் வைர கற்களின் எடை மதிப்பு குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இதுகுறித்து கர்னூல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பக்கீரப்பாவிடம் கேட்டபோது விவசாயி ஒருவர் பெரிய வைரத்தை கண்டுபிடித்ததாக மூத்த போலீஸ் அதிகாரி எங்களுக்கு தகவல் தெரிவித்தனர் இதுகுறித்து போலீஸ் விசாரணை தொடங்கி உள்ளனர் என்று விளக்கமளித்துள்ளார்.

5 கோடி ரூபாய் வரை மதிப்புள்ள வைர கற்கள்:

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் நெருங்கும் சமயத்தில் ஜொன்னகிரி சுற்றுவட்டார பகுதியில் யாரோ ஒருவருக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள வைரம் கிடைத்துவிட்டதாக தகவல் பரப்புவதும் அதை நம்பி ஏராளமான மக்கள் வைரக்கற்களை தேடி அலைவதும் வாடிக்கையாக இருக்கிறது.

ஆகவே உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாமல் பல தனியார் நிறுவனங்கள் வைர வேட்டையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அதாவது ஆண்டுக்கு சுமார் 5 கோடி ரூபாய் வரை மதிப்புள்ள வைர கற்கள் இந்த விவசாய நிலங்களில் இருந்து கிடைப்பதாகவும் தகவல்கள் உள்ளன எப்படியோ ஏழைகளுக்கு கடச்சாசரிதான்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending