Connect with us

News

இறந்த பெண் மீண்டும் உயிருடன்

Published

on

கொரோனாவால் இறந்து விட்டதாக அடக்கம் செய்யப்பட்ட வயதான பாட்டி கிரிஜம்மா அவரின் ஆத்மா சாந்தியடைய நடந்த பிரார்த்தனை கூட்டத்தின் போது திடீரென இறந்த பெண் வீட்டிற்கு திரும்பி வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கிரிஜம்மா.

அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விஜயவாடா அரசு மருத்துவமனையில் மே 12ஆம் தேதி சிகிச்சைக்காக சேர்ந்தார்.

இறப்பு சான்றிதழ் மருத்துவமனை சார்பில்:

மே 15ஆம் தேதி கிரிஜம்மா இறந்துவிட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர் சடலத்தையும் உறவினர்களிடத்தில் ஒப்படைத்தனர் கிரிஜம்மாவின் உறவினர்கள் அவர் சடலத்தை பெற்று கிறிஸ்தவ முறைப்படி கல்லறையில் அடக்கம் செய்தனர்.

கிரிஜம்மாவின் இறப்பு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் வழங்கப்பட்டது.

ஆன்மா சாந்தி சிறப்பு பிரார்த்தனை:

இதற்கிடையில் கிரிஜம்மாவின் மகன் ரமேஷ் தெலுங்கானா மாநிலம் கம்மம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இவரையும் உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

இந்த நிலையில் இறந்து போன இருவரின் ஆன்மா சாந்தி அடைவதற்காக கிரிஜம்மாவின் வீட்டில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.

இந்த பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கிரிஜம்மா வீட்டிற்கு உயிருடன் திரும்பினார்.

உயிரிழந்ததாக அடக்கம் செய்த கிரிஜம்மா திடீரென உயிருடன் வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த குழப்பத்திற்கு காரணம்:

விஜயவாடா அரசு மருத்துவமனையில் கிரிஜம்மா சிகிச்சையில் இருக்கும்போது அவர் இறந்த தாக கூறி வேறு ஒரு பெண்ணின் உடலை வழங்கியதே இந்த குழப்பத்திற்கு காரணம் என்பது தெரிய வந்தது.

அவரை போன்ற தோற்றம் கொண்ட வேறு ஒரு பெண்ணின் உடலை அடக்கம் செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.:

அலட்சியமாக செயல்பட்ட ஊழியர்கள்:

தற்போது அடக்கம் செய்யப்பட்ட பெண் யார் என்பது தெரியாமல் மருத்துவமனை ஊழியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

அலட்சியமாக செயல்பட்ட ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சில மருத்துவர்கள் செய்யும் இதுபோன்ற செயலினால் அனைத்து மருத்துவர்களையும் மக்கள் குறைகூறி வருகின்றனர்.

1 Comment

1 Comment

  1. Pingback: மருத்துவரை காப்பாற்ற பணம் திரட்டிய கிராம மக்கள் - News crowns

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending