Connect with us
Those who do not wear the mask are sure to be fined Those who do not wear the mask are sure to be fined

Corona

மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் நிச்சயம் !

Published

on

மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் நிச்சயம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து கூறியிருந்தார்.


தமிழகத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என அரசு தரப்பில் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

பொது இடங்களுக்கு மக்கள் செல்லும்போது அவர்கள் தனிமனித இடைவெளியும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.


இதையடுத்து நேற்று சென்னையில் ஒரேநாளில் முககவசம் அணியாத 1022 பேரிடம் 2.18 லட்சம் ரூபாய் அபராதம் நேற்று ஒரே நாளில் விதிக்கப்பட்டு உள்ளது. எனவே முக கவசம் அணியாவிட்டால் இனி 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending