Connect with us
Theft of body parts in hospital Theft of body parts in hospital

News

மருத்துவமனையில் உடல் உறுப்புகள் திருட்டு !

Published

on

உடுமலைப்பேட்டை சார்ந்த பெண் பிரவீனா இவரது தாயார் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு உள்ளார் இதனால் அவர் கோவையில் சுந்தரா புரத்தில் அமைந்துள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


அவரது தாயாருக்கு சரியான சிகிச்சை அளிக்காமல் பிரவீனா விடம் இருந்து சிகிச்சைக்காக அதிக பணம் வாங்கியுள்ளனர் இந்த தனியார் மருத்துவமனை.


இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி எந்த ஒரு காரணமும் இன்றி முத்துகவுண்டன்புதூர் க்கு அழைத்து சென்றுள்ளனர் மே மாதம் நான்காம் தேதி தாயார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் கோபமடைந்த பிரவீனா எந்த ஒரு காரணம் இன்றி தாயாரை அழைத்து சென்றது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் சிலர் அவரிடம் அவரது தாயாரின் உடல் உறுப்புகள் திருடப்பட்டு விட்டது அதனால் தான் தாயார் இறந்துவிட்டார் என கூறியுள்ளனர்.


இதனையடுத்து பிரவீனா பல இடங்களில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அப்போது போலீஸ் கமிஷனரிடம் நேரடியாக தானே சென்று புகாரை அளித்துள்ளார் இந்த புகாரின் பேரில் காவலர்கள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending