Connect with us
The unfortunate thing that happened in the temple on New Year The unfortunate thing that happened in the temple on New Year

News

புத்தாண்டு அன்று கோயிலில் நடந்த அசம்பாவிதம் !

Published

on

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள வைஷ்ணவி தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலியாகினர். ஜம்மு காஷ்மீரில் திரிகுதா மலையில் அமைந்துள்ள வைஷ்ணவி தேவி குகைக் கோயில் இங்கு புத்தாண்டு தினத்தை ஒட்டி நேற்று நள்ளிரவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.


அதிகாலை சுவாமி தரிசனத்திற்காக பஞ்சாப், ஹரியானா போன்ற பல இடங்களிலிருந்தும் பக்தர்கள் திரண்டு வந்தனர் இதையடுத்து அங்கு கூட்டம் அலை கடலென திரண்டது பக்தர்கள் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர்.


கூட்ட நெரிசலில் 12 பேர் உயிரிழந்தனர் மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் ஆறு பேர் சடலம் மீட்கப்பட்டுள்ளது படுகாயம் அடைந்தவர்களை மீட்டு காவல்துறை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


இதில் உயிர் இழந்தவர்களுக்கு நஷ்ட ஈடாக ரூபாய் 2 லட்சம் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் தருவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending