Connect with us
The third wave has spread in Tamil Nadu The third wave has spread in Tamil Nadu

Corona

தமிழகத்தில் முன்றாவது அலை பரவி விட்டது !

Published

on

தமிழகத்தில் மூன்றாவது அலை அச்சத்தில் பொதுமக்கள். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றில் இருந்து உருமாறிய ஒமைக்ரான் தொற்று மற்றும் கொரோனா மூன்றாவது அலை பரவலை கட்டுப்படுத்துவது தமிழக அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.


இதையடுத்து தமிழக அரசு தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது பொதுமக்கள் கட்டுப்பாடுகளை சரியாக கடைபிடிக்காத காரணத்தினால் தமிழகத்தில் மூன்றாவது அலையின் பாதிப்பு தினசரி அதிகரித்து வருகிறது.


நாள் ஒன்றுக்கு 600க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வருகின்றார்கள் எனவே தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கட்டாயமாக பின்பற்றுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.


தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது தினசரி தடுப்பூசி முகாம்கள் ஆங்காங்கே நடக்க படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருநகரங்களில் கட்டாயமாக பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும் எனவும் தனிமனித இடைவெளியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending