Connect with us
The government banned the sale of alcohol !!! The government banned the sale of alcohol !!!

News

மதுபானம் விற்பனை செய்ய அரசு தடை விதித்தது !

Published

on

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை இல்லை இருப்பினும் புத்தாண்டு நள்ளிரவில் மது விற்பனைக்கு தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

புதுச்சேரி மாவட்டத்தில் புத்தாண்டை ஒட்டி எந்த ஒரு தடையும் இல்லாமல் மக்கள் செல்லலாம் எனவும் மற்ற மாநிலங்களைப் போல் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் வெளியே செல்லலாம் எனவும் கலைநிகழ்ச்சி போன்ற மக்கள் கூடும் இடங்களில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் அதிகாரிகள் கண்காணிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும் புதுச்சேரியில் ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த ஜெகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது இருப்பினும் அண்டை மாநிலமான புதுச்சேரியில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பது நோய் தொற்று அதிகரிக்கும் எனவும் அந்த மனுவில் இருந்தது.

எனவே அவசர அவசரமாக இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டிசம்பர் 31 இரவு 10 மணி முதல் ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை ஒரு மணி வரை மது விற்பனை செய்ய தடை விதித்துள்ளது மேலும் இரண்டு தவணை தடுப்பூசி காலத்தில் மட்டுமே கலைநிகழ்ச்சிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending