Connect with us
The boy was shot and wounded The boy was shot and wounded

News

துப்பாக்கி குண்டு தாக்கி சிறுவன் படுகாயம் !

Published

on

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை பகுதியை சேர்ந்த முத்து என்பவரின் வீட்டில் தங்கியிருந்த அவரது பேரன் புகழேந்தி என்ற 11 வயது சிறுவன் துப்பாக்கி குண்டுபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சி ஐ எஸ் எஃப் வீரர்களுக்கான பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது இதில் தினமும் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்று வருகிறது.

தற்போது அந்த பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அருகிலிருந்த முத்து என்பவரின் வீட்டில் சுவரில் ஒரு குண்டு துளைத்து உள்ளது மேலும் 11 வயதேயான புகழேந்தி என்ற சிறுவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவர் தலையில் பட்டது உடனே அந்த சிறுவன் மயங்கி விழுந்துள்ளார்.

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த சிறுவனை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending