Connect with us
Teacher arrested for falling in love with student !!! Teacher arrested for falling in love with student !!!

News

மாணவனை காதலித்த ஆசிரியை கைது !

Published

on

அரியலூர் மாவட்டம் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆசிரியர் ஒருவர் காதலித்து லவ் டார்ச்சர் செய்ததால் ஆசிரியர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் சில நாட்களாக பள்ளி மாணவர்களிடம் ஆசிரியர்கள் அத்துமீறி நடந்து கொள்வதாக எழுந்துள்ள புகார் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது தமிழக அரசும் இதுபோன்ற ஆசிரியர்களை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.

தற்பொழுது இதுவரை எழுந்த புகாரில் பள்ளி மாணவிகளின் பெற்றோர்களை வியப்பூட்டும் வகையில் இந்த புகார் அமைந்துள்ளது அரியலூர் மாவட்டத்தில் ஒரு பள்ளியில் ஆசிரியை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு லவ் டார்ச்சர் என்ற பெயரில் தவறாக நடந்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஆசிரியை ராசாத்தி என்பவர் பத்தாம் வகுப்பு மாணவனிடம் சிறிது நாட்களாகவே லவ் டார்ச்சர் செய்து வந்துள்ளார் காதல் என்ற பெயரில் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார் இதனை பத்தாம் வகுப்பு மாணவன் பெற்றோரிடம் சொல்லவே அவர்கள் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

ஆசிரியை முதல் கட்ட விசாரணை செய்ததில் ஆசிரியை அந்த பத்தாம் வகுப்பு மாணவனை காதலித்தது உண்மைதான் என்று அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார் இது பெற்றோர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending