Connect with us
snake that peeked its head out of the cooker snake that peeked its head out of the cooker

News

குக்கரில் இருந்து எட்டிப்பார்த்த நல்ல பாம்பு !

Published

on

கடலூர் அருகே சமையலறையில் நல்ல பாம்பு பதுங்கி இருந்ததால் அந்த பகுதியே சிறிது நேரம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் வசித்து வரும் பாரதி இளமாறன் குடும்பத்தினர் வீட்டில் உள்ள சமையல் அறையில் திடீரென நல்ல பாம்பு புகுந்துள்ளது. குடும்பத்தினர் ஏதோ வினோதமான சத்தம் சமையலறையில் இருந்து வருவதை அறிந்து அது பாம்பின் சத்தமாக இருக்கக்கூடும் என சந்தேகப்பட்டு உடனடியாக பாம்பு படிப்போருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த பாம்பு பிடிக்கும் செல்லம் என்பவர் சமையலறையில் அடுக்கி வைத்திருந்த பாத்திரங்களை சோதித்து பார்த்தபோது குக்கரில் இருந்து நல்ல பாம்பு வந்து தலையை எட்டி பார்த்தது அதைக்கண்டு குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.

snake that peeked its head out of the cooker
snake that peeked its head out of the cooker

நல்ல பாம்பை பிடிக்க முயன்றபோது அது படம் எடுத்தது பாம்பு பிடிக்கும் வீரர் அந்த பாம்பை பத்திரமாக பிடித்தார் சமையல் செய்யும் குக்கரில் நல்லபாம்பு எப்படி வந்திருக்கும் என்று குடும்பத்தினர் திகைத்து போனார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending