Connect with us
Sania Mirza retires from sports Sania Mirza retires from sports

News

சானியா மிர்சா விளையாட்டிலிருந்து ஓய்வு !

Published

on

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 ஓபன் டென்னிஸ் போட்டியின் போது சானியா மிர்சா டென்னிஸ் விளையாட்டில் இருந்து தனது ஓய்வு பற்றி அறிவித்தார்.


2003 ஆம் ஆண்டிலிருந்து டென்னிஸ் விளையாட்டை விளையாடத் தொடங்கிய சானியா மிர்சா தனது 19 வருட டென்னிஸ் விளையாட்டில்‌ பல சாதனைகள் புரிந்துள்ளார்.

தற்போது அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்ற ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடி வருகிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் தன் மகனுக்கு மூன்று வயது ஆகிறது அவனை கூட்டிக்கொண்டு பல இடங்களுக்கு பயணம் செய்ய மிகவும் கடினமாக உள்ளது.

Sania Mirza retires from sports
Sania Mirza retires from sports

மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு டென்னிஸ் விளையாட்டில் தொடர்ந்து விளையாட முடியாத சூழலில் ஏற்படலாம் என்றும் தான் டென்னிஸ் விளையாட்டில் ‌நீண்ட காலம் பயணம் செய்து விட்டதாகவும் தனக்கு ஓய்வு தேவை என்றும் சானியா குறிப்பிட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending