Connect with us
Rowdies 2 Encounter Police Action Rowdies 2 Encounter Police Action

News

ரவுடிகள் 2 பேர் என்கவுண்டர் போலீஸ் அதிரடி !

Published

on

நேற்று இரவு செங்கல்பட்டு பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தின் அருகில் மக்கள் கூட்டமாக இருந்த இடத்தில் இரட்டைக் கொலை நடந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த கொலையை குறித்து காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர் தற்போது இந்த கொலையை செய்தது ஓரு பெண் உட்பட 4 பேர் எனவும் தெரியவந்தது.

மொய்தீன், தினேஷ், ஜெசிக்கா, மாதவன் இந்த நான்கு பேரையும் காவலர்கள் கைது செய்தனர் மேலும் காவலர்களிடம் இருந்து தப்பிச் செல்ல நாட்டு வெடிகுண்டு வீசி சென்று உள்ளனர் அதில் இரு காவலர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

அதன் பின் உடனடியாக காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் அதில் மைதீன், தினேஷ் ஆகிய இருவரும் மேலும் இந்த நான்கு பேர் மீதும் பல குற்றங்கள் இருப்பதாகவும் குறிப்பாக தினேஷ் மற்றும் மைதீன் மீது கொலைக் குற்றம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ஜெசிக்கா மற்றும் மாதவன் ஆகிய இருவரிடமும் இந்த இரட்டைக்கொலை நடந்ததற்கான காரணம் மற்றும் இந்தக் கொலைக்கு பின் யார் இருக்கிறார் எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending