Connect with us
Pink Force புதுவகையான காவலர்கள் அறிமுகம் !!! Pink Force புதுவகையான காவலர்கள் அறிமுகம் !!!

News

Pink Force புதுவகையான காவலர்கள் அறிமுகம் !

Published

on

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கோவா மாநில அரசு அதனை தடுக்கும் வகையில் புதிய காவல் படையை உருவாக்கி உள்ளது.

இந்தக் காவல் படையில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த காவல் படை Pink Force என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

கோவாவில் சில தினங்களுக்கு முன் ஒரு சிறுமியின் உடல் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது மேலும் அதனை அடுத்து பாலியல் தொல்லை அளித்ததாக ஒரு சிறுமி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் இதுபோன்ற பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் பல மாநிலங்களிலும் நடந்து கொண்டு தான் வருகிறது.

Pink Force புதுவகையான காவலர்கள் அறிமுகம் !!!

இந்தப் Pink Force காவல் படையின் மூலம் சுற்றுலா பயணிகள் மற்றும் சிறுமிகள் பெண்கள் போன்றவர்கள் பாதுகாக்கப் படுவார்கள் எனவும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் 5 நிமிடத்தில் சம்பவ இடத்தில் இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்த காவல் படையை கோவாவில் உள்ள 11 காவல் நிலையத்தில் இணைத்துள்ளனர் மேலும் அனைத்து காவல் நிலையத்திலும் இதுபோன்ற ஒரு காவல்படை இணைப்பதாக கூறப்படுகிறது.

கோவா முதலமைச்சர் பிரோமோத் சாவந்த் இவர்தான் இந்தப் புதுவகை காவல் படையை உருவாக்கியவர் மேலும் இவருக்கு பல பேர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending