Connect with us
இந்திய போர் விமான விபத்தில் விமானி மரணம் !!! இந்திய போர் விமான விபத்தில் விமானி மரணம் !!!

News

இந்திய போர் விமான விபத்தில் விமானி மரணம் !

Published

on

இந்திய விமானப்படையில் பல போர் விமானங்கள் உள்ளன அதில் முக்கியமான ஒரு விமானம் பயன்படுத்தப்படும் மிக்-21 (MiG-21) இந்த வகை விமானம் போர்களுக்கு உபயோகப்படுத்தப்படும் விமானமாகும்.

நேற்றைய தினம் டிசம்பர் 24 ஆம் தேதி அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே சுதாசரி என்ற பகுதியில் வானத்தில் பறந்து கொண்டிருக்கும்போது ஏதோ விபத்து காரணமாக விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது.

இந்த போர் விமானத்தை இயக்க விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இதனை அறிந்த சாம் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் உடனடியாக சென்று இவ்வாறு விபத்து ஏற்பட்டது என ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் இந்த விமானத்தை இயக்கியவரின் உடலை கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது ஆனால் இறந்தவர் யார் என பெயர் இதுவரை விமானப் படைத் தரப்பில் கூறப்படவில்லை.

நேற்று இரவு 8 மணி அளவில் விமானப்படை அதிகாரபூர்வமாக இந்த விபத்து குறித்த தகவலை வெளியிட்டுள்ளது அதில் மிக்-21 (MiG-21) இந்த வகை விமானம் விபத்துக்கு உட்பட்டதாகவும் இது பயிற்சியின்போது வெடித்ததாகவும் இது எவ்வாறு விபத்துக்குள்ளானது என விசாரணை நடத்தி வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending