Connect with us
Online வகுப்பில் வெடித்த போன் சிறுவன் படுகாயம் !!! Online வகுப்பில் வெடித்த போன் சிறுவன் படுகாயம் !!!

News

Online வகுப்பில் வெடித்த போன் சிறுவன் படுகாயம்

Published

on

கொரோனா தொற்று பரவிய காலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் முழுமையாக மூடப்பட்டன அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் வழியாக மட்டுமே பாடம் எடுக்கப் பட்டது மேலும் தேர்வுகளும் இதுபோன்று ஆன்லைனில் வைக்கப்பட்டது.

இதன் காரணமாக அனைத்து மாணவர்களும் மொபைல் போன் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது ஏற்கனவே சில இடங்களில் ஆன்லைன் வகுப்புகளில் மொபைல் போன் வெடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தற்போது மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த ராம்பிரகாஷ் என்ற மாணவன் வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டுள்ளார்.

Online வகுப்பில் வெடித்த போன் சிறுவன் படுகாயம் !!!

அப்போது அந்த மாணவனின் வீட்டில் பெற்றோர்கள் இல்லை எனவும் தெரியவந்துள்ளது திடீரென அந்த மொபைல் போன் வெடித்துள்ளது வெடித்ததில் மாணவனை படுகாயத்துடன் அக்கம் பக்கத்தினர் மீட்டு உள்ளனர்.

மேலும் அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் புகாரின் பேரில் காவலர்கள் விசாரணை செய்துள்ளனர் மேலும் அந்த மாணவரின் தாடையில் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending