Connect with us
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு ஒமிக்ரான் !!! வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு ஒமிக்ரான் !!!

Corona

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு ஒமிக்ரான் !

Published

on

வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்களின் தொடர்பில் இருந்த முப்பத்தி ஒன்பது பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருப்பதாக தமிழக மக்கள்நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் கண்டிப்பாக ஏழு நாட்கள் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் நட்சத்திர ஹோட்டலில் எந்தவிதமான பொது நிகழ்ச்சிகளை வைக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார் மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் சேர்ந்து எந்த நிகழ்வும் செய்யக்கூடாது எனவும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஒமிக்ரான் பாதிப்பால் சிகிச்சை பெற்று கொண்டிருந்தவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் மேலும் மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வெளியில் செல்ல வேண்டுமெனவும் அவர் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending