Connect with us
Omegron infection accelerating in India !!! Omegron infection accelerating in India !!!

Corona

இந்தியாவில் வேகம் எடுக்கும் ஒமைக்ரான் தொற்று

Published

on

தென் ஆப்பிரிக்காவில் மட்டும் பரவத் தொடங்கிய இந்த அதி வேகமாகப் பரவக் கூடிய ஒமைக்ரான் என்ற கொரோனா வைரஸிலிருந்து மரபணு மாற்றமடைந்த வைரஸ் தற்போது பல நாடுகளில் பரவி வருகிறது.

தற்போது இது படிப்படியாக பரவத் தொடங்கி 100க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது மேலும் இந்த வைரஸ் காரணமாக பாதிப்பு இல்லை என மருத்துவர்கள் கூறி இருந்தனர்.

இருப்பினும் இந்த வைரஸ் ஆனது வேகமாக பரவக்கூடிய வைரஸ் ஆகும் டெல்டா வைரசை விட மூன்று மடங்கு வேகமாக பரவக்கூடிய வைரஸ் இதன் காரணமாக மருத்துவர்கள் மிகுந்த பயத்தில் இருந்தனர்.

தற்போது இந்த வைரஸ் இந்தியாவில் 22 மாநிலங்களில் பரவியதாகவும் அதாவது குறிப்பாக இரு மாநிலங்களில் இந்த வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மிக அதிகமாக பரவி இருப்பதாகவும் டெல்லியில் 263 மற்றும் மகாராஷ்டிராவில் 252 அதுவும் உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

தற்போது இந்த வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் பல மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் போராடி வருகின்றனர் மேலும் மக்கள் வீட்டில் இருக்குமாறும் வெளியில் கூட்டமாக செல்ல வேண்டாம் எனவும் அவர் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending