Connect with us
Letter from the Department of Health to prevent further spread Letter from the Department of Health to prevent further spread

Corona

கொரோனா பரவலை தடுக்க சுகாதார துறை கடிதம்

Published

on

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் இரட்டிப்பாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு புத்தாண்டு கொண்டாட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.மேலும் தமிழகத்தில் 50 க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.


இந்நிலையில் தமிழகத்தில் இந்த வைரஸ் தொற்று பரவலை குறைக்க நேற்று மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத் துறை சார்பில் கடிதம் எழுதி அனுப்பப்பட்டிருந்தது.


எனவே பொதுமக்கள் தனிமனித இடைவெளியை பொது இடங்களில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பொது இடங்களில் கூட்டம் கூட கூடாது என்றும் முககவசம் கட்டாயமாக அணிய வேண்டும் எனவும் அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending