Connect with us

News

KSRTC என்ற பெயர் யாருக்கும் சொந்தம்

Published

on

KSRTC என்ற சொல்லை யார் பயன்பாடுத்துவது என்று கேரள கர்நாடக மாநிலங்களின் சண்டை ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

இதனால் KSRTC என்ற சொல் கேரள அரசு போக்குவரத்து கழக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ரிஜிஸ்ட்ரார் ஆஃப் பாக்ஸ் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

இரு மாநிலங்களும் சண்டை:

கேரள கர்நாடக மாநிலங்களில் முதல் எழுத்து K ஆங்கில எழுத்தில் தொடங்கும் அண்டை மாநிலங்களான இரு மாநில அரசு பேருந்துகளும் KSRTC என்று சுருக்கமாக அழைக்கப்பட்டது.

எனவே கேரள மாநில அல்லது கர்நாடக மாநில போக்குவரத்து கழகம் என்பது இதன் விளக்கமாகும்.

இதில் கே எஸ் ஆர் டி சி என்ற சொல்லை எந்த மாநிலம் பயன்படுத்துவது என்று இரு மாநிலங்களும் சண்டை போட்டுக் கொண்டன.

ஆதாரத்துடன் ஆவணங்களை சமர்ப்பித்தனர்:

எதை எடுத்தாலும் தனக்குத்தான் என்று உரிமை கொண்டாடும் கர்நாடக மாநிலம்.

அவர்கள் முதன் முதலில் கடந்த 2014ஆம் ஆண்டு கே எஸ் ஆர் டி சி என்ற பிராண்ட் எங்களுக்கு உரியது என்று கேரள மாநில போக்குவரத்து கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அதனை அடுத்து கேரள மாநிலம் Registrar of Trademarks நிறுவனத்தை அணுகி கேரளா தான் முதன்முதலில் கே எஸ் ஆர் டி சி என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்கான ஆதாரத்துடன் ஆவணங்களை சமர்ப்பித்து.

பிரிட்டிஷார் காலத்தில்:

பிரிட்டிஷார் காலத்தில் அதாவது 1937 ஆம் ஆண்டு காலத்தில் Travancore-Cochin Transport Department என்ற பெயரில் போக்குவரத்து கழகத்தை நடத்தியதாகவும்.

இதனால் இந்திய விடுதலைக்குப் பிறகு 1965 ஆம் ஆண்டு முதல் கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு கே எஸ் ஆர் டி சி என்ற பெயர் பயன்படுத்தியதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்து.

7 ஆண்டுகளாக நடந்து வந்த சண்டை:

கர்நாடக போக்குவரத்து கழகம் 1973ஆம் ஆண்டு தான் கே எஸ் ஆர் டி சி என்ற சொல்லை பயன்படுத்தத் தொடங்கியதற்கான ஆதாரங்களையும் கேரள அரசு போக்குவரத்து கழகம் முன்வைத்தது.

இதையடுத்து Registrar of Trademarks நிறுவனம் கே எஸ் ஆர் டி சி என்ற பிராண்ட் கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு உரித்தானது என்று தீர்ப்பளித்தது.

இதனால் கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வந்த சண்டைக்கு தற்போது முற்றுப்புள்ளி விழுந்தது.

KSRTC என்ற பெயர் பயன்படுத்தக் கூடாது:

கே எஸ் ஆர் டி சி நிர்வாக இயக்குனர் பிஜூ பிரபாகர் கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்துக்கு கே எஸ் ஆர் டி சி என்ற சொல்லை பயன்படுத்த உரிமை இல்லை.

இந்த பிராண்டை இனி அவர்கள் பயன்படுத்தக் கூடாது இது தொடர்பாக விரைவில் நாங்கள் அந்த மாநிலத்துக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கிறோம் என்றார்.

கேரளாநாலே KSRTC பேருந்து தான் ஞாபகத்துக்கு வரும் இவங்க என்னடானா அந்த பேருந்தோட பெயர் அவங்களோடதுனு சொல்லுறாங்க.

இது ஒரு நாள் தமிழ்நாடு பக்கம் திரும்பாம இருந்தா சரி இதுக்கப்புறம் கர்நாடகாவால ஒண்ணும் பண்ண முடியாது.

1 Comment

1 Comment

  1. Pingback: Post Office ATM card பெறுவது எப்படி மற்றும் நன்மைகள் -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending