Connect with us
Holidays today for school and college Holidays today for school and college

News

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை !

Published

on

சென்னை, காஞ்சிபுரம் ,திருவள்ளூர்,செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


தொடர்ந்து ஐந்து நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது இதையடுத்து சென்னை உட்பட நான்கு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கியது.


கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டும் அல்லாமல் சென்னையில் புறநகர்களில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


கனமழை காரணமாக இன்று சென்னையில் அவசர சேவைகளை தவிர பள்ளி கல்லூரிகளுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது கனமழை மீட்பு பணிகள் சென்னை புறநகர்களில் நடந்து வருகின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending