Connect with us
Government bans night traffic in Chennai !!! Government bans night traffic in Chennai !!!

Corona

சென்னையில் இரவு போக்குவரத்திற்கு அரசு தடை !

Published

on

சென்னையில் நாளை இரவு 12 மணி முதல் ஒன்றாம் தேதி காலை 5 மணி புத்தாண்டு வரை வாகன போக்குவரத்துக்கு தடை என சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.


கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர புத்தாண்டு கொண்டாட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை பெருநகர காவல்துறை அறிவித்திருந்தது .

இதைத் தொடர்ந்து சென்னை மாநகரத்தில் நாளை இரவு 12 மணி முதல் 1ஆம் தேதி காலை 5 மணி வரை சென்னை மாநகரத்தில் போக்குவரத்திற்கு தடை என காவல்துறை அறிவித்தது.


அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் மருத்துவர்கள், காவல் துறை வாகனம் போன்றவைகளை மட்டும் செல்ல அனுமதி என்றும் மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகர காவல்துறை அறிவிப்பு விடுத்தது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending