Connect with us
Government bans New Year celebrations !!! Government bans New Year celebrations !!!

News

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு தடை !

Published

on

கொரோனா அதிகரிப்பால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு மற்றும் காவல் துறை தரப்பில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.


கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இந்த ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது இதனை‌ சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.


கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை தவிர்க்கும் பொருட்டு டிசம்பர் 31-ஆம் தேதியன்று இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் சுற்றுவதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.

மேலும் பொது இடங்களில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக கூட்டம் கூட வேண்டாம் என்றும், தங்கும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட கூட்டம் கூட வேண்டாம் எனவும் காவல்துறை வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் சென்னையில் உள்ள சில கடற்கரையில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை மக்கள் செல்ல அனுமதி இல்லை எனவும் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending