Connect with us
General Examination for 10th and 12th class students General Examination for 10th and 12th class students

News

10 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு !

Published

on

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் 10 மற்றும் 12 வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு கண்டிப்பாக நேரடி பொது தேர்வு என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு நேரடி தேர்வுகள் வைப்பதால் மாணவ மாணவிகளுக்கு கொரோனா பரவக் கூடும் என்பதை உணர்ந்து அரசு தரப்பில் தற்போது 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு தங்கள் பள்ளிகளிலேயே தடுப்பூசி முகாம் அமைத்துள்ளது தமிழக அரசு.


இதனால் அனைத்து மாணவ மாணவிகளும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அரசு தரப்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தி கொள்ளும் மாணவ மாணவிகள் தங்கள் முன்பதிவை கோவின் இணையதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகளையும் அரசு வெளியிட்டுள்ளது.
எனவே 10, 11, 12 வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு உறுதியாக நேரடி பொதுத்தேர்வு நடைபெறும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending