Connect with us

News

Flight Ticket 999/- Only and 10 % Offer End Jul 30

Published

on

இந்தியாவின் முன்னணி பட்ஜெட் கட்டண விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் மற்றும் இண்டிகோ வாடிக்கையாளர்களை கவர பல சலுகைகளை அளித்துள்ளன Flight Ticket.

இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே கொரோனா தொற்று வாட்டி வதைத்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இரண்டாவது அலையால் பெரும் நிறுவனங்கள் முதல் சாலையோர கடைகள் வரை பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது தமிழ்நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனை எடுத்து கொரோனாவால் முடங்கியிருந்த தங்களது தொழிலை மீண்டும் மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை நிறுவனங்கள் எடுத்து வருகின்றனர்.

கொரோனாவால் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளான துறைகளில் விமான துறையும் ஒன்று மக்களின் பயணங்களை மட்டுமே நம்பி தொழில் நடத்தும் விமான நிறுவனங்கள் கொரோனா ஊரடங்கால் தங்களது சேவையை தொடர முடியாமல் தவித்தன.

பயணிகள் விமான சேவைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் விமான நிறுவனங்களின் செலவுகள் மட்டும் குறையவில்லை.

குறிப்பாக ஊழியர்களின் சம்பளம் பராமரிப்பு செலவுகள் ஆகியவற்றை தொடர்ந்து செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின இந்த நிலையில் தற்போது விமான பயணங்கள் மேற்கொள்வதில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தங்களது வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பதற்காக பல்வேறு சலுகைகளை விமான நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.

அதிரடியான சலுகைகள் Flight Ticket :

இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி பட்ஜெட் கட்டண விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் அளித்துள்ள சலுகை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது கடந்த 25ஆம் தேதி மெகா மான்சூன் சேல் என்ற பெயரில் அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்.

அதன்படி உள்நாட்டு விமான கட்டண தொகையானது 999 ரூபாயிலிருந்து ஆரம்பமாகிறது இதன் மூலம் உள்நாட்டு பயணிகள் நாட்டின் சில பகுதிகளுக்கு வெறும் 999 ரூபாயிலிருந்து பயணிக்கத் தொடங்கலாம் இந்த 999 ரூபாய் என்பது அனைத்து கட்டணங்களையும் உள்ளடக்கியது.

மேலும் இந்த விமானக் கட்டணத்திற்கு ஈடான தொகைக்கு அதாவது ஆயிரம் ரூபாய் வரை இலவச விமான வவுச்சரும் கிடைக்கும் என அறிவித்துள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த அதிரடி சலுகை திட்டமானது ஜூன் 25 அன்று தொடங்கிய நிலையில் ஜூன் 30 2021 வரையில் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆகஸ்ட் 1, 2021 முதல் மார்ச் 31, 2022 வரை பயணித்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விமான நிறுவனத்தின் இணையத்தில் பதிவு செய்யும்போது Grocers, Mfine, Medibuddy, Mobikwik, PARK Hotels உள்ளிட்ட நிறுவனங்களின் சிறப்பு Offers கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10% Offer:

இது ஒரு வழிப் பயணத்திற்கு மட்டுமே பொருந்தும் எனவும் நேரடி உள்நாட்டு விமானங்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த விற்பனையின் கீழ் பதிவு செய்யக்கூடிய இந்த டிக்கெட்டுகள் மாற்றம் மற்றும் இரத்து செய்யக் கூடியவை உட்பட இன்னும் சில நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் மற்றொரு விமான சேவை நிறுவனமான இண்டிகோ கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட பயணிகளுக்கு விமான கட்டணத்தில் 10 சதவீத சலுகையை அறிவித்துள்ளது.

மேலும் பயணத்தின் போது கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் கூறி உள்ளது.

இந்தியாவின் முன்னணி பட்ஜெட் கட்டண விமான நிறுவனங்கள் இரண்டும் தங்கள் பயணிகளை ஈர்க்க மேலும் பல சலுகைகளை வரும் காலங்களில் அறிவிக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

1 Comment

1 Comment

  1. Pingback: Tamil Nadu extends lockdown till 12 July - Job newscrowns

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending