Connect with us
Atrocities committed by a teacher against a student. Atrocities committed by a teacher against a student.

News

ஆசிரியரால் மாணவிக்கு நடந்த கொடூரம் !

Published

on

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை பகுதியை சார்ந்தவர் அசோக்குமார் இவருக்கு வயது 37 ஆகிறது இவர் உடுமலை பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.


அசோக் குமார் தான் பணிபுரியும் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவியிடம் ஆபாச குறுந்தகவல்களை மாணவியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி உள்ளார் தன் ஆசிரியரின் இந்த கொடூர செயலை பற்றி மாணவி தன் பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை.


‌‌பெற்றோர் திடீரென்று மாணவியின் கைப்பேசியை‌ சோதித்த போது அதில் அசோக்குமார் அனுப்பிய ஆபாச குறுஞ்செய்திகளை கண்டு அதிர்ந்து போனார். இதை அடுத்து பெற்றோர் காவல்துறையினரிடம் உடனடியாக புகார் பதிவு செய்தனர்.

Atrocities committed by a teacher against a student.
Atrocities committed by a teacher against a student.

இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் உடனடியாக தீவிர விசாரணை செய்து குற்றவாளி இவர்தான் என உறுதி செய்து அவரை சிறையில் அடைத்தனர்.


தமிழ் ஆசிரியர் இவ்வாறான செயலை செய்தது அப்பள்ளியில் பயிலும் சக மாணவர்கள் பெற்றோர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending