Connect with us

Cricket news

ALL TIME GREAT னு அஸ்வினை சொல்லாதீங்க வைரலாகும் கருத்து

Published

on

தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்திற்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். (ALL TIME GREAT)

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நெருங்கி வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக விளங்குபவர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

பவுலிங் ஜாம்பவான்(ALL TIME GREAT):

T20 ஒருநாள் போட்டிகளில் மட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.

அவர் வரும் நாட்களில் பவுலிங் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் சாதனையை முறியடிப்பார்.

ALL TIME GREAT என அஸ்வினைஎன கிரிக்கெட் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

மக்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்:

இந்த நிலையில் அவரை ஆல் டைம் கிரேட் ALL TIME GREAT என கூறுவதாக எதிர்ப்பதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு அவர் விளையாடி வருவதைப் பார்க்கும்போது அவர் ஒரு சிறந்த வீரர் என்று நான் நம்புகிறேன்.

ஆனால் எல்லாக் காலத்திலும் அஸ்வின் சிறந்த வீரர் என மக்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

SENA எனக் கூறப்படும்:

அஸ்வினிடம் உள்ள பிரச்சனை என்னவென்றால் SENA எனக் கூறப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள மைதானங்கள் பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு உகந்ததாகும்.

ஆனால் இந்த நாடுகளில் எல்லாம் அஸ்வின் ஒருமுறைகூட 5 விக்கெட்டுகளை சேர்ந்தது போல் வீழ்த்திய தில்லை. இந்திய ஆடுகளங்கள் அவருடைய சூழலுக்கு ஏற்றாற்போல் இருப்பதால் தான் அவரால் இங்கு விக்கெட் வீழ்த்த முடிகிறது.

அஸ்வினை விட அக்சர் படேல்:

அஸ்வினை போலவேதான் ரவீந்திர ஜடேஜாவும் இந்திய ஆடுகளங்களில் அதிக விக்கட்டுகளை வீழ்த்திம் திறமை கொண்டவர்.

அதேபோல கடந்த இங்கிலாந்து தொடரில் இந்திய ஆடுகளங்களில் அஸ்வினை விட அக்சர் படேல் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பல வீரர்கள் இப்படி இருக்கும் போது அஸ்வினை எப்படி அனைத்து கால சிறந்த பவுலர் என்று கூறுவது. என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

இணையத்தில் வைரல்:

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ALL TIME GREAT இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழக வீரர் அபினவ் முகுந்த் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஒரு வீரர் மதிப்பு அவரின் ரெக்கார்டு‌ பொறுத்துதான் என தெரிவித்துள்ளார். தற்போது சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஐபிஎல்லின் மீதமுள்ள போட்டிகள் செப்-19 ல் துவங்கலாம்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட உள்ள எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி துவக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக இந்த சீசனில் எஞ்சிய 31 போட்டிகள் தள்ளி வைப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த மாதம் அறிவித்தது.

இப்போது அதை தொடர்ந்து துபாய் அபுதாபி மற்றும் சார்ஜாவில் இந்த போட்டிகளை நடத்த பிசிசிஐ மற்றும் அமீரக கிரிக்கெட் வாரியம் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தி அதில் இந்த முடிவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஐ பி எல் இருதி போட்டி அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி நடக்கும் என கூறப்படுகிறது……

2 Comments

2 Comments

  1. Pingback: இறந்த பெண் மீண்டும் உயிருடன் - News crowns

  2. Pingback: கன்னியாகுமரி, திருவள்ளுவர் சிலை அமைத்து 20 ஆண்டுகள் கடந்தன - News crowns

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending