Connect with us
All pass for 1st to 9th grade students All pass for 1st to 9th grade students

News

1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் !

Published

on

தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்ய பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் காரணத்தினால் ஒன்பதாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் செய்ய பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது.

10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு வழக்கம்போல் திட்டமிட்டபடி பொது தேர்வு நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியாகி வருகிறது.

கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது வெகுவாக அதிகரித்து வரும் நிலையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதில் கல்லூரிகள் மற்றும் பயிற்சிக் கூடங்கள் வழக்கம்போல் இயங்கும் என்றும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார் மேலும் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் கல்லூரிகள் இயங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending