Connect with us
70 மடங்கு வேகத்தில் பரவும் ஒமைக்ரான் வைரஸ் !!! 70 மடங்கு வேகத்தில் பரவும் ஒமைக்ரான் வைரஸ் !!!

Corona

70 மடங்கு வேகத்தில் பரவும் ஓமைக்ரான் வைரஸ் !

Published

on

கொரோனா வைரஸ் ஒருவழியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் ஓமைக்ரான் என்ற புதுவகை மரபணு மாற்றம் அடைந்த வைரஸ் அதிவேகமாக பரவிக் கொண்டு வருகிறது.

இது தற்போது 90ககும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களை அச்சுறுத்துகிறது மேலும் டெல்டா வைரசை விட இது விரைவில் மக்களுக்கு பரவக் கூடியது என ஆய்வில் தெரிய வந்தது.

மேலும் அது ஆய்வின் போது இது மக்களுக்கு அவ்வளவு பாதிப்பைத் தராது எனவும் அதிகாரப்பூர்வமாக வெளியானது இருப்பினும் இந்த புதுவகை வைரஸ் ஏற்கனவே பரவிய டெல்டா வைரசை விட 70 மடங்கு வேகத்துடன் மக்களுக்கு பரவிக் கொண்டு வருகிறது என உலக சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர்.

இதனை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் தடுப்புசி செலுத்திக் கொள்வது கட்டாயம் எனவும் தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க வேண்டுமெனவும் மக்கள் கூடும் இடத்தில் செல்ல வேண்டாம் என்று உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இந்த டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் புத்தாண்டு பண்டிகைகளை மக்கள் அனைவரும் கொண்டாடும் இந்த சூழ்நிலையில் யாரும் கூட்டமாக கொண்டாட வேண்டாம் எனவும் அரசு தரப்பில் கூறுகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending