Connect with us
சிறுவனுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி !!! சிறுவனுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி !!!

Corona

7 வயது சிறுவனுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு !

Published

on

கடந்த மாதத்தில் தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் மக்களுக்கு கண்டறியப்பட்ட ஒமிக்ரான் எனப்படும் மரபணு மாற்றம் அடைந்த வைரஸ் தொற்று அங்கு சில மக்களுக்கு பரவியது.

இதனை அடுத்து இதுவரை 60க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் தொற்றானது பரவியிருப்பது மருத்துவ சோதனையில் தெரியவந்துள்ளது.

தற்போது மகாராஷ்டிரா, கேரளா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இந்த உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன் அபுதாபியிலிருந்து கொல்கத்தா வந்த ஒரு குடும்பத்தில் 7 வயது சிறுவனுக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது மேலும் அந்த சிறுவனை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி உள்ளனர் மருத்துவர்கள்.

மேலும் அந்த சிறுவனின் குடும்பத்தை சேர்ந்த அனைவருக்கும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதா என பரிசோதனை செய்யப்பட்டது அதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என தெரியவந்தது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending