Connect with us

News

600 நாட்களுக்கு பிறகு நாளை பள்ளிகள் திறப்பு !

Published

on

தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக 600 நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது நவம்பர் 1ஆம் தேதி நாளை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க முடிவு எடுத்துள்ளனர்.

முதலமைச்சரின் அறிவுரையின்படி நாளை ஆரம்பிக்கும் இருக்கும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளில் விருப்பம் இருக்கும் மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம் எனவும் அறிவுரை கூறப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களுக்கான வகுப்புகளில் மாணவர்கள் சமூக இடைவெளி விட்டு தான் அமர வேண்டும் எனவும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மாணவர்களுக்கு மதிய சத்துணவு கிடைக்கும் எனவும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending