Connect with us

News

யானைகள் 500 கிலோ மீட்டர் நடந்ததால் குறட்டை விட்டு தூங்கியது

Published

on

சீனாவில் இலக்கே இல்லாமல் போய் கொண்டிருக்கும் யானைகள் கூட்டத்தினை காட்டுக்குள் அனுப்பி வைக்க அந்நாட்டு வனத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள்.

குன்மிங் அருகே முகாம்:

இந்த யானை குடும்பம் வயல்வெளிகளில் ஒழுங்குடன் படுத்துறங்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

சீனாவின் தெற்கு மாகாணமான யுனானில் வனப்பகுதியில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவு நடந்து வந்துள்ள பதினைந்து யானைகள் அடங்கிய குடும்பம் இந்த மாகாணத்தின் தலைநகரான குன்மிங் அருகே முகாமிட்டு இருக்கின்றன.

இந்த கூட்டத்தில் ஆறு பெண் யானை மூன்று ஆண் யானை மூன்று இளம் பருவ யானைகள் மற்றும் மூன்று குட்டிகள் அடையுள்ளன.

100 பாதுகாப்பு வாகனங்கள்:

தற்போது குன்மிங் நகரத்தின் புறநகரான யூக்சி என்ற இடத்தில் இந்த யானைகள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.

குன்மிங் நகரம் சுமார் 85 லட்சம் மக்கள் தொகை கொண்டது இதனால் யானைகள் நகரத்திற்குள் நுழையாத வண்ணம் 700 வனத்துறை ஊழியர்கள் காவல்துறையினர் அவற்றை கண்காணித்து வருகின்றனர்.

மற்றும் 100 பாதுகாப்பு வாகனங்களும் யானைகளை தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றன.

உல்லாசமாய் குளியல் போடுகின்றன:

இந்த யானைகள் கடந்து வந்த 500 கிலோமீட்டர் தொலைவு பாதையில் பல கிராமங்கள் இருக்கின்றன ஆனால் பெரியளவில் யானை மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தவில்லை.

ஆங்காங்கே பயிர்களை மட்டும் சேதப்படுத்தி சாப்பிட்டு உள்ளன. பல கிராமங்களில் யானைகளுக்கு பழங்கள் வைத்து மக்கள் விருந்து அளித்தும் கௌரவித்திருக்கிறார்கள்.

எனினும் யானைகுடும்பங்கள் இரவு நேரத்தில் அங்கே சுற்றி திரிவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எனவே யானை குடும்பங்கள் அமைதியாக உணவுகளை காலி செய்கின்றனர் தண்ணீர் தாகம் எடுத்தால் ஊருக்குள் குடிநீர் குழாயை தேடிச்சென்று டேப்பை திறந்துவிட்ட தண்ணீர் குடிக்கின்றன. பின்னர் திடீரென்று காட்டுக்குள் போய் உல்லாச குளியல் போடுகின்றன.

உறங்கும் அழகான புகைப்படம்:

எனினும் இந்த யானைகுடும்பங்கள் எங்கே செல்கின்றன என்கிற காரணம் அறிந்து கொள்ள முடியாததால் சீன அதிகாரிகள் ரொம்ப குழம்பிப் போய் உள்ளனர்.

அவ்வப்போது ஊருக்குள் வருவதும் பிறகு மறைந்து போய் விடுவதாக இந்த யானை கூட்டம் இருக்கிறது.

இதனால் அதிகாரிகள் யானை கூட்டத்தை ட்ரோன் வழியாக கண்காணித்து வருகின்றனர். அப்போது இந்த யானைக் கூட்டம் மிகுந்த குடும்ப ஒழுங்குடன் வாழ்வது தொரிய வந்தது.

ட்ரோன் மூலம் யானை குடும்பத்தை கண்காணித்த போது யானை குடும்பம் வயல்வௌி ஒன்றில் வரிசையாக அழகுடன் அருகருகே படுத்து உறங்கும் அழகான புகைப்படம் எடுக்கப்பட்டது.

சீனர்கள் போல் அல்லாமல் இந்த யானைகள்!!!

யானைக்கூட்டம் இப்படி குடும்பத்துடன் ஓய்வு எடுப்பதை காண்பது அரிதிலும் அரிது என்று வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

நீண்ட தொலைவு நடந்து வந்த களைப்பு மற்றும் மயக்கத்தால் யானைகுடும்பம் தங்களை மறந்து உறங்கி இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

தற்போது யானை கூட்டம் உறங்கும் புகைப்படத்தை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பகிர்ந்து வருகிறார்கள். சிலர் சீனர்கள் போல் அல்லாமல் இந்த யானைகள் ரொம்ப சாஃப்ட் ஆக இருக்கின்றன குட்டி யானைகுடும்பம் ரொம்பவே கியூட் என்றும் பாராட்டி வருகிறார்கள்.

லங்கு பட்டியலில் A பிரிவில் உள்ளன:

பர்மா நாட்டுடன் எல்லையை பகிர்ந்து உள்ள யூனான் மாகாணத்தில் நம்ம ஊர் நீலகிரி மாவட்டம் போன்று ஏராளமான யானை குடும்பமாக வசிக்கின்றன.

சீனாவில் யானைகள் பாதுகாக்கப்பட்ட வன விலங்கு பட்டியலில் A பிரிவில் உள்ளன இதனால் யானைகளுக்கு யாரும் சிறு தீங்கு கூட விளைவித்து விட முடியாது

கடந்த 1980-ஆம் ஆண்டு யூனான் மாகாணத்தில் 193 யானைகள் இருந்தன சீன அரசு யானைகளை பாதுகாக்க கடும் நடவடிக்கைகள் எடுத்த தால் தற்போது அவற்றின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending