Connect with us
4 மாவட்டத்திற்கு 15 நாட்கள் கால அவகாசம் !!! 4 மாவட்டத்திற்கு 15 நாட்கள் கால அவகாசம் !!!

News

4 மாவட்டத்திற்கு 15 நாட்கள் கால அவகாசம் !

Published

on

தமிழகத்தில் மிகுந்த கனமழை பெய்து வருவதால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது வீடுகளுக்குள் தண்ணீர் வந்து உணவு உண்ண கூட வழியில்லாமல் தவிக்கின்றனர்.

தற்போது மின்சார கட்டணம் செலுத்த நாட்கள் அறிவிக்கப்பட்டன அதனை தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி 4 மாவட்டத்திற்கு மட்டும் 15 நாட்கள் அவகாசம் கொடுத்து உள்ளார்.

மழையால் மிகுந்த பாதிப்படைந்த சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம்.

இரு தினங்களுக்கு முன் பன்னீர்செல்வம் செந்தில் பாலாஜியிடம் மனு ஒன்றை சமர்ப்பித்திருந்தார் அதில் மக்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த அவகாசம் கொடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

அதற்கு செந்தில் பாலாஜி மக்கள் அவ்வாறு கேட்கவில்லை எனவும் இதை தீர விசாரித்து முதலமைச்சருடன் கலந்தாய்வு செய்து நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

தற்போது மழையால் மிகுந்த கஷ்டத்தில் இருக்கும் நான்கு மாவட்ட மக்களுக்கு மட்டும் இது போன்று பல சலுகைகளும் தமிழக அரசு செய்து கொண்டு வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending