Connect with us
3 guards who took bribe through Google Pay 3 guards who took bribe through Google Pay

News

Google Pay மூலம் லஞ்சம் வாங்கிய 3 காவலர்கள் !

Published

on

கோவை மாவட்டத்தில் மாங்கரை என்ற பகுதியில் காவல்துறை சோதனை சாவடி செயல்பட்டு வருகிறது வழக்கம்போல் சோதனை சாவடி செயல்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் ஐயப்பன் என்பவர் டெய்லராக வேலை பார்த்து வருகிறார் யோகாசனம் பாய் செய்து விற்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் காவல்துறை சோதனை சாவடியை கடக்க முயன்றுள்ளார்.

அப்பொழுது சோதனைச் சாவடியில் இருந்த 3 போலீசார் வழிமறித்து இந்த யோகாசன பாய்க்கான உரிய ரசீது காட்டிய பின்னரே யோகாசன பாய் தரப்படும் என கூறி அந்தப் பாயை பறிமுதல் செய்துள்ளனர்.

உடனே ஐயப்பன் கோவை மாவட்டத்தில் உள்ள டிஎஸ்பி அவர்களிடம் புகார் அளிக்க டிஎஸ்பி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார் அப்பொழுது அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது இந்த மாங்கரை பகுதியை கடந்து கேரளா செல்லும் இருசக்கர வாகனங்கள் கார்கள் லாரிகள் போன்ற வாகனங்களை வழிமறித்து google pay மூலம் பணம் பெற்று வந்தது வெளிச்சமானது.

உடனே டிஎஸ்பி அந்த சோதனை சாவடியில் இருந்த தலைமைக் காவலர் முத்துச்சாமியை ஆயுத படைக்கும் மற்ற இரண்டு போலீசாரை மொட்டாலையா படைக்கு மாற்றம் செய்தும் அவர்களுக்கு உரிய தண்டனையை அளித்து உள்ளார் இதனை பார்த்த அந்த ஊர் மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக கூறி உள்ளார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending