Connect with us

News

27 மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிப்பு !

Published

on

தமிழகத்தில் தொடர்ந்து நிற்காமல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து இருந்தனர்.

தற்போது வங்கக்கடலில் உருவாகியிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு மையமானது புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் இப்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் நிற்காமல் கன மழை பெய்து கொண்டே வருகிறது.

இதன் காரணமாக மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் 26 ஆம் தேதி மற்றும் 27 ஆம் தேதி அன்று விடுமுறை அறிவித்திருக்கின்றனர்.

மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நாமக்கல் காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கன்னியாகுமரி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, பெரம்பலூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், அரியலூர், விருதுநகர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விழுப்புரம், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை எனவும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் புதுச்சேரி, காரைக்காலில் மாவட்டத்திற்கு இன்று மற்றும் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending