Connect with us

News

2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை முதல்வர் !

Published

on

சென்னையில் நேற்று முதல் பெய்து வரும் கன மழையால் சென்னையில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த குளம் போல் காட்சி அளித்து வருகிறது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப இன்று முதலமைச்சர் மக்களை நேரில் சந்தித்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளித்து மேலும் மழை நீரால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்து.

மேலும் அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 1070 என்ற அவசர எண்ணை தொடர்பு கொள்ளலாம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் அடுத்து இரண்டு நாட்கள் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார்.

சென்னையை பொறுத்தவரை அனைத்துக் குடியிருப்புகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராத வகையில் வெள்ளத்தை அப்புறப்படுத்த வேண்டும் என துப்புரவு பணியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மேலும் நேற்று மட்டும் 20 சென்டி மீட்டர் அளவு மழை பெய்துள்ளதால் குடியிருப்பு பகுதிகள் குளம் போல் காட்சி அளித்து வருகிறது.

Trending