Connect with us

News

1,8ஆம் வகுப்புக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும்

Published

on

பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளி கல்லூரி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பை அழைத்துள்ளார். சற்று முன் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் தொடர்ந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்து ஆலோசனை செய்வதாக கூறியிருந்தார்.

தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 15ஆம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அவர் திட்டவட்டமாக கூறியிருந்தார்.

மேலும் அவர் கூறுகையில் அரசு சுகாதார அமைப்பு வல்லுனர்களுடன் ஆலோசனைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து தமிழ்நாடு முதல்வர் முடிவெடுப்பார் என்று அவர் கோரியிருந்தார்.

மேலும் அவர் கூறுகையில் முதல் 40 முதல் 45 நாட்களுக்கு மாணவ மாணவிகளை பள்ளிக்கு வர வைப்பதுதான் முக்கிய நோக்கம் இதற்கு புத்தக பயிற்சிகள் நடத்தப்படுகிறது. அதன் பின்னரே முறையான வகுப்புகள் தொடங்கும் என தெரிவித்தார்.

தற்பொழுது திறக்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகள் முறையான அல்லது சீரான வகுப்புகள் தொடங்கும் பட்சத்தில் அரசு நடுநிலைப் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் அவர் வெளிப்படையாக பேட்டி அளித்து இருந்தார்.

அவர் பெற்றோர்களிடம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புமாறு கேட்டிருந்தார் கொரோனா அச்சம் காரணமாக பல பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் அவர்களின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா இப்பொழுது இவ்வுலகை விட்டு நீங்கும் என்று யாருக்கும் தெரிவதில்லை. இதனால் அதனுள் வாழப் பழக வேண்டும் பிள்ளைகளை பள்ளிக்கு கட்டாயம் அனுப்ப வேண்டும் என்று அவர் அந்த பத்திரிக்கையில் கூறியிருந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending