Connect with us

News

12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் இன்று வெளியீடு!

Published

on

தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து மாணவர்களுக்கு 10 ,11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது.

அந்த மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்று தேர்வாணையம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தேர்வு வெற்றிகரமான முறையில் நடைபெற்றது.

இந்த நிலையில் மறுதேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் இன்று www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் வெளியிடப்பட்டது.

மருத்துவர் எழுதிய மாணவர்கள் தங்களது தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி தனது மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் மேலும் பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளும் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அதிரடி அறிவிப்பை அளித்துள்ளது.

இருப்பினும் வரும் 15ஆம் தேதி மற்றும் 17ம் தேதிகளில் விடைத்தாள் நகல் மற்றும் மறுபதிப்பு ஈடு செய்வதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

கல்வித் துறை அமைப்பு அதிலும் குறிப்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் கட்டணத்தை செலுத்தி மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending