Connect with us

Corona

1 முதல் 10 வயது குழந்தைகளுக்கு கெரோனா !!!

Published

on

கெரோனா வைரஸ் பாதிப்பு ஒரு வயது முதல் 10 வயதுடைய குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் என மருத்துவ நிபுணர்கள் குழு எச்சரிக்கை செய்துள்ளது.

கடந்த சில நாட்களாக கெரோனா தொற்றின் காரணமாக குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவதாக செய்தி ஊடகங்களில் கூறப்படுகிறது.

இந்த மூன்று அலைகளிலும் குழந்தைகள் மட்டுமே பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். ஒரு வயது முதல் 10 வயதுடைய குழந்தைகள் கெரோனா வைரஸால் பாதிக்கப்படும் சதவீதம் கடந்த ஐந்து மாதங்களில் 2.80 சதவீதத்திலிருந்து 7.04 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதில் குறைவாக குழந்தைகள் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் என்று எடுத்துக் கொண்டால் டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் ஆகும்.

இதைப்பற்றி நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் தலைமையில் ஒரு ஆலோசனைக்குழு நடத்தப்பட்டது அதில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

ஆனால் உயிரிழப்பு குறைவாகவே உள்ளது எனவும் ஆனாலும் பெற்றோர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் பெரியவர்களுக்கு கெரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சிறு குழந்தைகளுக்கு பாதிப்பு சிறு அளவில் அதிகரித்து வருகிறது என ஐ சி எம் ஆர் தெரிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending