Connect with us

News

ஸ்டார்மிங் ஆபரேஷனில் 3325 பேர் கைது !!!

Published

on

தமிழ்நாடு முழுவதும் நடந்த ஸ்டார்மிங் ஆபரேஷனில் 3325 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் செப்டம்பர் இருபத்தி மூன்று இரவு முதல் முற்றுகைச் செயல்பாடு அதிரடியாக செயல்பட்டு வருகிறது எனவும்.

இவ்வாறு சோதனை செய்யப்பட்டவர்களில் 3325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இவர்களில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளின் ஆணையின்படி கைதானவர்கள் 294 பேர்.

பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய 972 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இரவு நேரத்தில் சோதனையின் போது குற்றவாளிகளிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கிகள் 7 மற்றும் கத்திகள் உட்பட பிற ஆயுதங்கள் 1110 என மொத்தம் 1117 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காவல்துறையினர் தொடர்ந்து இதுபோன்ற சோதனையில் இறங்குவதாக தெரிவித்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending