Connect with us

Cricket news

ஷிகர் தவானை விவாகரத்து செய்த ஆயிஷா !!

Published

on

இந்திய கிரிக்கெட்டின் மிகுந்த புகழ் பெற்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானும் ஆயிஷா முகர்ஜியும் விவாகரத்து செய்துகொண்டு பரஸ்பரமாக பிரிந்துவிட்டனர்.

அவர்களுக்கு திருமணமாகி ஒன்பது ஆண்டுகளாக அவர்கள் இருவர் இடையே உள்ள திருமணபந்தம் தற்போது முடிவுக்கு வந்தது. ஆயிஷாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது தவானை ஆயிசா இரண்டாவதாக கல்யாணம் செய்துள்ளார் ஆனால் தவானுக்கு ஆயிஷா முதல் மனைவிதான்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஆயிஷாவின் முதல் கணவர் இவர்கள் இருவருக்கும் ரியா, அலியா என இது குழந்தைகள் உள்ளன.

ஆனால் அவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். ஆயிஷாவின் தந்தை இந்தியாவை சேர்ந்தவர் இதனால் ஆயிஷா இந்திய பாரம்பரியத்தை கொண்ட பெண்.

ஆயிஷாவின் தாயார் பிரிட்டனை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த ஆயிஷா தொழில்முறை குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்தார் இவர் ஹர்பஜன் சிங்கின் நெருங்கிய நண்பர் ஆவார்.

இவர் மூலமாக தவானுக்கு ஆயிஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறிவிட்டது இதனை தன்னுடைய பெற்றோரிடம் கூறி ஆயிஷாவிற்கு வயது அதிகம் என்பதால் அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர் ஆனால் அந்த எதிர்ப்பையும் மீறி 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர் ஆயிஷாவை மட்டுமின்றி அவரது இரு குழந்தையை தவான் பராமரித்து வந்தார்.

தவான் மற்றும் ஆயிஷாவிற்கு 2014ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இப்பொழுது ஆயிஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவாகரத்து செய்தது என்னை இன்னும் வலிமையான பெண் என்று காட்டுகிறது பெண் யாருக்கும் அடிமை இல்லை எனக் கூறியுள்ளார்.

Trending