Connect with us
வேகமாக மக்களுக்கு பரவும் ஒமிக்ரான் வைரஸ் !!! வேகமாக மக்களுக்கு பரவும் ஒமிக்ரான் வைரஸ் !!!

Corona

வேகமாக மக்களுக்கு பரவும் ஒமிக்ரான் வைரஸ் !

Published

on

தென்னாப்பிரிக்காவில் இருந்து மக்களுக்கு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸிலிருந்து உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் ஆனது மக்களுக்கு மிகுந்த பாதிப்பு தரும் என உலக சுகாதாரத் துறையினர் கூறியுள்ளனர்.

தற்போது இந்த ஒமிக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பானது அறுபத்தி ஒன்றிற்கு மேற்பட்ட நாடுகளில் இதுவரை பரவி உள்ளது மேலும் கேரளாவில் ஒருவருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இந்த வைரஸ் தொற்று ஒரு மாணவிக்கு ஏற்பட்டுள்ளது இது பரிசோதனையில் தெரியவந்தது இதனையடுத்து உடனடியாக அந்த மாணவியை தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்கி வருகின்றனர் அதன்பிறகு கல்லூரியில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து வருகின்றனர்.

மேலும் இந்த வைரஸ் பாதிப்பானது இந்த வருடம் தொடக்கத்தில் டெல்டா எனப்படும் ஒரு விதமான வைரஸ் ஏற்பட்டது அதனைக் காட்டிலும் வேகமாக பரவக்கூடியது தான் ஒமிக்ரான் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் இரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பாதிப்பு தரும் எனவும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படாமலிருக்க பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமெனவும் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending