Connect with us

News

வெள்ளத்தில் மிதக்கும் கேரள மாநிலம் !

Published

on

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்கு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் பல இடங்கள் தண்ணீர் மூலம் இருந்து வருகிறது.

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளாவின் சில மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனால் அந்த மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் மிகவும் சிரமத்தில் உள்ளனர். கோட்டயம் அருகே கேரள மாநில அரசு பேருந்து வெள்ளத்தில் சிக்கியதால் அதில் இருந்த பயணிகள் ஓட்டுனர் இருக்கை வழியாக மீட்கப்பட்டு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் கேரளாவில் காட்டாற்று வெள்ளம் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர் ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை செய்துள்ளதால் தேசிய பேரிடர் மீட்புக் குழு அங்கு விரைந்து சென்றுள்ளது.

தொடர் மழையின் காரணமாக அக்டோபர் 19ஆம் தேதி வரை சபரிமலை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending