Connect with us
விமானப்படை கேப்டன் வருண் சிங் உயிரிழப்பு !!! விமானப்படை கேப்டன் வருண் சிங் உயிரிழப்பு !!!

News

வீரவணக்கம் விமானப்படை கேப்டன் வருண் சிங் !

Published

on

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் அவருக்கு பாதுகாவலராக சில பேர் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் பதினான்கு பேர் இதில் சென்றுள்ளனர்.

இதில் சென்ற 14 பேரில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் ஒருவர் மற்றும் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

கேப்டன் வருண் சிங் இவர் 2020 ஆம் ஆண்டில் தேஜஸ் போர்களுக்கு பயன்படுத்தப்படும் விமானத்தை இவர் இயக்கிய போது மிக அதிக உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென அது கட்டுப்பாட்டை இழந்தது இந்நிலையில் அவர் எவ்வித பாதிப்புமின்றி தரை இறக்கினார்.

மேலும் இவர் தேஜஸ் போர் விமானத்தை எவ்வித பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியதற்காக இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் சௌர்யா சக்கரம் விருதை பெற்றார்.

இவர் தொடர்ந்து மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இவரது இறப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending