Connect with us

News

விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுப்பு !

Published

on

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று காலையில் அனைத்து விமானங்களும் அட்டவணைப்படி சரியாக இயங்கும் என அறிவித்திருந்தனர் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் மழை காரணமாக விமானம் இறங்கும் இடத்தில் மழை நீர் நிறைந்திருப்பதால் அங்கு தரை இறங்கும் விமானங்கள் ஏதாவது விபத்து ஏற்படும் என எண்ணி ஆறு மணி நேரத்திற்கு விமானங்கள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னையில் மிக அதிகமாக மழை பொழிகிறது இதனால் சென்னை மற்றும் அதை சுற்றி வசிக்கும் அனைத்து மக்களும் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

மாடி வீட்டில் இருக்கும் மக்கள் மட்டும் ஏதோ தப்பித்து இருக்கின்றனர் வெளியில் இறங்க முடியாத அளவிற்கு தண்ணீர் மேலும் வீட்டிற்கு உள்ளேயும் தண்ணீர் வந்து மக்களை மழை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending