Connect with us

News

வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை

Published

on

இந்தாண்டு தொடக்கத்தில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்தது குறிப்பாக நாள் ஒன்றுக்கான வேலை நேரம் எட்டிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தப்படும் என்று கூறப்பட்டது. இந்த அறிவிப்பு தொழிற்சங்கங்கள் இடையே எதிர்ப்பை வரவழைத்தது.

அதே சமயம் தொழில் நிறுவனங்கள் இதனை வரவேற்றன இதனை போட்டது மத்திய அரசு தற்போது மீண்டும் அது தொடர்பான பேச்சு எழுந்துள்ளது.

தற்போது ஒரு நாளைக்கு 8 மணி நேர வித 6 நாட்களுக்கு நாற்பத்தி எட்டு மணி நேரமாக தொழில் நிறுவனங்களில் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

புதிய மாற்றங்களில் ஒரு வாரத்தில் 48 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்களிடம் வேலை வாங்க வேண்டும். இந்த விதி அப்படியே இருக்கும் மாறாக ஒரு நாளைக்கான வேலை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை வாங்கினால் நான்கு நாட்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். மீதமிருக்கும் மூன்று நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும். அது ஒவ்வொரு தொழிலாளர்களின் ஒப்புதலுடன் நடைபெற வேண்டும்.

ஏனென்றால் அனைவராலும் 12 மணிநேரம் வேலை செய்ய இயலாது ஒருபோதும் தொழிலாளர் நலனை மத்திய அரசு விட்டுக் கொடுக்காது அனைவருக்கும் இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் விதிமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

உடல் நலம் பாதிப்பு, பிரசவம் போன்ற காரணங்களுக்காக அதிகபட்சம் 240 வரை விடுமுறை எடுக்கலாம் என்று இருந்தது அது தற்போது 300 நாட்கள் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இப்போது இருக்கும் புதிய விதிகளின் படி அடிப்படை ஊதியம் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கிறது.

ஆனால் பர்டி தொகை அதிகமாக இருக்கிறது அதாவது வீட்டு வாடகை படி அகவிலைப்படி பயணப்படி உள்ளிட்டவற்றில் துவை அடிப்படை ஊதியத்தை விட அதிகமாக இருக்கிறது.

புதிய விதிகளின் படி ஊழியர்களுக்கும் கொடுக்கும் அடிப்படை ஊதியம் குறைந்தபட்சம் 50 சதவீதம் இருக்க வேண்டும். இது தவிர்த்து வழங்கப்படும் படி தொகை 50 சதவீதத்திற்கு மேல் செல்லக்கூடாது. அடிப்படை ஊதியம் அதிகமானால் Pf பித்தமும் அதிகரிக்கும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending