Connect with us

News

வரும் உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்?

Published

on

உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய் சுயேட்சையாக களம் நிற்கப்போகும் விஜய் மக்கள் இயக்கம் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட பச்சைக்கொடி காட்டி இருக்கிறார் நடிகர் விஜய்.

தமிழகத்தில் தற்போது புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் மாதம் ஆறாம் தேதி மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்சிகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது.

வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நெல்லை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபர் 6ஆம் தேதியில் தேர்தலும் விழுப்புரம், தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்கி இருக்கும் இந்த நிலையில் புதிதாக விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் இதில் களம் இறங்க தயாராகி வருகின்றார்கள்.

முன்னதாக நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அதனால் இந்த முறையும் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்து வந்தனர் அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்த தலைமை அதற்கு அனுமதி அளித்திருக்கிறது.

இதுதொடர்பாக அவர்கள் விஜயின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் அமைந்திருக்கும் அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை தலைவர் ஆனந்த் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் 9 மாவட்ட நிர்வாகிகளை தனியே கலந்து பேசி இருக்கிறார் நடிகர் விஜய்.

அந்த ஒன்பது மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் சுவற்றில் கட்சியாக போட்டியிட்டு கொள்ளலாம் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending