Connect with us

News

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு !

Published

on

தமிழகத்தில் அடுத்த நான்கு நாளைக்கு பலத்த மழை பெய்யும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறிப்பில் அந்த மையம் தெரிவித்த தகவலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

24ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் கனமழைக்கு 25 ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் கனமழை 26ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த 4 நாட்களுக்கு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அடுத்து 4 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending