Connect with us
யூடியூப் பார்த்து பிரசவம் ஆண் குழந்தை பலி !!! யூடியூப் பார்த்து பிரசவம் ஆண் குழந்தை பலி !!!

News

யூடியூப் பார்த்து பிரசவம் ஆண் குழந்தை பலி !

Published

on

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் இறந்து பிறந்த ஆண் குழந்தை தகவல் அறிந்த காவலர்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் இவர் அதே பகுதியில் மரச்செக்கு எண்ணெய் கடை வைத்துள்ளார் இவருக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகின்றன.

இவரது மனைவிக்கு கடந்த 13ஆம் தேதி அந்த குழந்தை பிறப்பதாக மருத்துவர்கள் தேதி அறிவித்து இருந்தனர் அதன் பிறகு அந்த தேதியில் பிரசவ வெளி வராத காரணத்தால் அவர் மருத்துவமனைக்கு செல்ல வில்லை.

இதனையடுத்து திடீரென 18ஆம் தேதியன்று பிரசவ வெளி வந்தது அதனை அடுத்து அவரது கணவர் லோகநாதன் யூடியூப் மூலம் மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார் இதனையடுத்து அவருக்கு ஆண் குழந்தை இறந்தே பிறந்தது.

உடனடியாக லோகநாதன் மனைவி மயக்கம் அடைந்துள்ளார் உடனே அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார் அதன்பிறகு காவலர்கள் வந்து விசாரணை செய்ததில் இது தெரிய வந்தது மேலும் லோகநாதனிடம் காவலர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending